Tamil T-Shirt Banner

கோச்சடையானை படம் நீண்ட நாட்களாக அனிமேசன் வேலைகளில் இருந்ததால் படம் இழுத்தடித்து ஒரு வழியாக வெளிவந்தது. இருந்தும் அனிமேசன் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஆனால் அதே வேலையில் தமிழக அனிமேசன் குழு  கோச்சடையானை தழுவி வெளியிட்ட    “ரணதீரன் ” ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ட்ரைலர் முழுவதும் இலவச சாப்ட்வேர் மூலம் தாயரிக்கப்பட்டுள்ளது 

Ranadheeran

இன்றைய இந்தியத் திரையுலகம், அனிமேஷன் படம் என்றாலே பல கோடிகள் அள்ளிக் கொடுத்து வெளிநாட்டு அனிமேஷன் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றது. இப்படிப்பட்ட சூழலில், மிக எளிமையான தொழில்நுட்ப முறையில், குறைந்த செலவில், 20 அனிமேஷன் கலைஞர்களைக் கொண்டு ‘ரணதீரன்’ டிரைலரை உருவாக்கி அசத்தியிருக்கிறது கோயம்பத்தூரைச் சேர்ந்த ‘ரியல் வொர்க்ஸ் ஸ்டூடியோ’.

கடந்த 21-ஆம் தேதி யூ-டியூப்பில் பதிவேற்றப்பட்ட இந்த டிரைலர், இதுவரை 85,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து ரியல் வொர்க்ஸ் ஸ்டூடியோவின் இயக்குநர் சிவபிரசாத் வேலாயுதம் கூறுகையில், “சிறந்த ‘விஷ்வல் ஃப்பேக்ட்ஸ்’ (Visual Effects) தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தமிழ் நாட்டில் இருந்தே நாம் சிறப்பான அனிமேஷன் வீடியோவை உருவாக்க முடியும் என்பதை உணர்த்தவே இந்த டிரைலரை உருவாக்கினோம். நாம்வெளிநாட்டு நிறுவனங்களைத் தேடி செல்லவேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், இந்த டிரைலரை, சமீபத்தில் வெளிவந்த ‘கோச்சடையான்’ திரைப்படத்திற்கு சமர்ப்பிப்பதாகவும், கோச்சடையான் படத்தைவிட தம்மால் திறம்பட அனிமேஷன் படம் உருவாக்க முடியும் என்று நிரூபிப்பதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

“ரசிகர்கள் கோச்சடையான் படத்தோடு இதனை தொடர்புபடுத்திக் கொள்ள எளிதாக இருக்கும் என்பதாலே இவ்வாறு உருவாக்கினோம். இது நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் படி” என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

3 நிமிடங்கள் 52 நொடிகள் ஓடும் இந்த ட்ரெய்லரை 800 மணிநேரத்தில் உருவாக்கியிருக்கிறது இந்த சாதனைக் குழு.

இந்நிறுவனத்தின் சாதனையைப் பாராட்டி பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி : ஹிந்து தமிழ் 

அனிமேசன் என்பது அயல்நாட்டு மக்களால் மட்டுமே சாத்தியம் என்று நம்மூர் காரர்கள் கோடிகோடியாய் கொட்டி கொடுத்தாலும் சரியாக இல்லாமல் இருக்க , இலவச சாப்ட்வேர் மூலம் தயாரித்த படம் பட்டையை கிளப்புகிறது.
தமிழன் திறமைக்கு எனது பாராட்டுக்கள். உங்களுடைய  பாராட்டுக்களை பகிர்ந்து தெரிவிங்கள்
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner