Tamil T-Shirt Banner

ஒரு காலத்தில் கால் மற்றும் மெசேஜ் பண்ண காசு அதிகமாகவும், இன்டர்நெட் பயன்படுத்த காசு குறைவாகவும் இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன் வருகையால் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், இணையம் மூலம்  இலவசமாக போன் பேச வழிவகை இருப்பதாலும் மொபைல் டேட்டா கட்டணம் அதிகரித்து வருகிறது. உங்களுக்கான மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த மற்றும் கட்டணத்தை குறைக்க சில வழிகள் .

control-mobile-data-cost-kanini-tamilan

உங்களுக்கு தேவையான மொபைல் டேட்டா ப்ளானை பெறுங்கள். சிலர் கண்மூடித்தனமாக அன்லிமிட்டடு ப்ளான் வைத்துக்கொள்வார்கள். ஆனால் அதை முழுமையாக பயன்படுத்த மாட்டார்கள். மாதம் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் டேட்டா அளவை வைத்து உங்கள் ப்ளானை தேர்ந்தெடுங்கள்.

மொபைல் டேட்டா அலெர்ட் 

உங்கள் மொபைல் டேட்டாக்கு அலெர்ட் செட் செய்து கொண்டால் நீங்கள் அந்த அளவை தாண்டும் போது தானாகவே இணையம் நின்று விடும். இதனால் உங்கள் காசு சேமிக்கப்படும்.

மொபைல் டேட்டா அலெர்ட் செட் செய்ய 

Settings -> Wireless & Networks -> Data usage. இங்கு Mobile Data Limit என்பதை .டிக் செய்து கொண்டு கீழுள்ள ஆரஞ்ச் மற்றும் சிகப்பு கோடுகளை வைத்து அலெர்ட் செய்து கொள்ளலாம்.

 
முடிந்த வரை Wi-fi பயன்படுத்தப் பாருங்கள் 

 
பாக்ரௌண்ட் டேட்டா லிமிட் 

 
முடிந்தவரை ஆட்டோமாடிக் அப்டேட் செய்வதை நிறுத்துங்கள். இல்லாவிடில் உங்கள் மொபைல் டேட்டா செலவாகிகொண்டே இருக்கும்.

ப்ரௌசெர் முக்கியம் 

நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர் தகவல்களை சுருக்கி காட்டக்கூடியதாக இருந்தால் நல்லது. பொதுவாக opera mini இதனை சிறப்பாக செய்கிறது.

Cache மற்றும் Preload மொபைல் டேட்டா         

முடிந்தவரை cache மொபைல் டேட்டாவை அளிக்காதீர்கள். இது இணையம் இல்லமால் விரைவாக முன்பு பார்த்த இணைய பக்கத்தை பார்க்க உதவும். youtube வீடியோவை ஆப்லைன் மூலம் பார்க்கும் வசதி உண்டு.

வாட்ஸ்அப் ஆட்டோடவுன்லோட் 

வாட்ஸ்அப் ஆட்டோடவுன்லோட் ஆப்சனை நிறுத்தி வைத்து தேவையானவற்றை டவுன்லோட் செய்யுங்கள்.


.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner