Tamil T-Shirt Banner

உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு ஆபெரடிங் சிஸ்டம். தற்போது தனது அடுத்த பதிப்பை ஒரு முன்னோட்டமாக அறிவித்துள்ளது.ஆனால் N என்பதன் அர்த்தம் இன்னும் வெளியிடப்படவில்லை 

EFT

 

என்னப்பா இன்னும் ஆன்ட்ராய்டு மார்ஷ்மல்லொ(6.0) பதிப்பே இன்னும் முழுமையாக பல போன்களில் செயல்படவில்லையே என நீங்கள் கூறுவது கேக்கிறது. எனினும் ஆன்ட்ராய்டு 7.0(N) தொடக்க நிலையிலேயே உள்ளது. இதனை ஆன்ட்ராய்டு வடிவமைப்பாளர்கள் சோதனை முறையில் டவுன்லோட் செய்து புதிய அல்லது பழைய ஆப்களை ஆன்ட்ராய்டு 7.0(N)இல் இயங்க வைக்க முயற்சி செய்யலாம். ஆன்ட்ராய்டு 7.0(N) தற்போது கூகிள் நெக்சஸ் போன்களில் சோதனை பதிப்பை இயக்கி பார்க்கலாம் 

 

android-7.0-new-os-by-google

 

சரி, ஆன்ட்ராய்டு 7.0(N பதிப்பில் என்ன புதுசு என்றால், இதோ உங்களுக்காக 

 

மல்டிடாஸ்க்கிங் 
ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆப்கள் ஒரே நேரத்தில் ஒரே விண்டோ டிஸ்ப்ளே மூலம் இயக்கலாம். இது ஏற்கனவே சாம்சங், எல். ஜி போன்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது 

 

குய்க் செட்டிங்ஸ் 
போனில் ட்ரோப் டோவ்ன் செய்யும் போது 9ஆப்சன்களை நீங்கள் விரைவில் இயக்கலாம். 

 

நோடிபிகேசன் மாற்றம் 
ஆன்ட்ராய்டு 7.0(N)இல் பண்டல்டு  நோடிபிகேசன் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு ஆப்களின் நோடிபிகேசன்கள் ஒருங்கிணைகப்படும்    

 

பேட்டரி பவர் சேமிப்பது மேம்ப்படுத்தப்படும் 

 

ரீசண்ட் ஆப்ஸ் எனும் முன்னால் பயன்படுத்தப்பட்ட ஆப்ஸ்களின் இயக்கம் எளிதாக்கப்படுகிறது   

 

பைல் மேனேஜர் 
ஆன்ட்ராய்டு 7.0(N)இல் பைல் மேனேஜர் காபி,பேஸ்ட் மட்டுமல்லாது ஷேரிங், கூகுள் டிரைவ் இணைப்பு என பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன 

 

நம்பர் பிளாக் 
ஆன்ட்ராய்டு 7.0(N)இல் காண்டக்ட் நம்பரை போனிலேயே பிளாக் செய்யலாம். போனில் பிளாக் செய்யப்பட்ட நம்பர்கள் மற்ற வெளி அப்ப்ளிகேசன்களிலும் பிளாக் செய்யப்படும் 

 

அவசர கால மெடிக்கல் லாக் ஸ்க்ரீன் தகவல் 
உங்களது லாக் ஸ்க்ரீனில் அவசர கால மெடிக்கல் தகவல்கள் நிரப்பலாம். இதனால் விபத்து நேரிடும் பட்சத்தில் உங்களை பற்றிய தகவல்கள் எளிதில் கிடைக்கும் 

 

விரைவான ரீஸ்டார்ட் 
புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் செய்யும் போது optimizing apps செயலினால் போன் ரீஸ்டார்ட் ஆக  நிறைய நேரம் ஆகும்.  ஆன்ட்ராய்டு 7.0(N)இல்  ரீஸ்டார்ட் செய்வது விரைவாக்கப்பட்டுள்ளது 

 

செட்டிங்க்ஸ் ஆப் மாற்றம் 
நைட் மோட் தீம், டேட்டா சேவர், பேக்ரௌண்ட் ஆப் செயப்பாடுநிறுத்தம் என பல மாற்றங்கள் வரையுள்ளது.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம். 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

    

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner