கூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்
பேஸ்புக் நிறுவனத்தில் தமிழர் ஒருவர் முக்கிய பதவியில் விரைவில் சேர இருக்கிறார். அவர் தான் கோவையை சேர்ந்த ஆனந்த் சந்திரசேகரன்.
ஆனந்த் சந்திரசேகரன், யாஹூ, ஸ்நாப் டீல் மற்றும் உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை இடமாக கருதப்படும் சிலிகான் வேலியில் பல முன்னணி நிறுவனங்களில் முக்கிய பதவிவகித்துள்ளார்.
இதனை கருத்தில்க்கொண்டு பேஸ்புக் நிறுவனம் ஆனந்த் சந்திரசேகரனை தனது மெசேன்ஜர் ஆப் பிரிவில் உலக அளவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமை பிரிவில் பணியாற்றயுள்ளார். ஆனந்த் சந்திரசேகரன், மொபைல் ஆப் பற்றிய பிரிவில் வல்லமை பெற்றவர். மேலும் பேஸ்புக் மெசேன்ஜர் ஜூலை 16இல் 100 கோடி மாத பயனாளர்களை பெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆனந்த் சந்திரசேகரன், பேஸ்புக் மெசேன்ஜருக்கான பல புதிய செயல்முறைகளை வடிவமைக்கையுள்ளார்.
இதற்கு முன்பு, ஸ்நாப் டீல் , ஏர்டெல் கம்பெனிகளில் cheif product officer பதவியிலும், யாஹூ நிறுவனத்தில் சீனியர் டைரக்டர் பதவி வகித்துள்ளார். மேலும் யங் குளோபல் லீடர் விருதையும் வேர்ல்ட் எகனாமிக் போரம் மூலம் பெற்றுள்ளார்.
இவர் கோவையில் பிறந்து, பி.ஸ். ஜி கல்லூரியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் உலகை ஆள்வான் என்பது மற்றுமொருமுறை நிறுவனமாகியுள்ளது. ஆனந்த் சந்திரசேகரன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள், வளருங்கள்
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.