Tamil T-Shirt Banner

உலகை தன்வசப்படுத்த பேஸ்புக் பல திட்டங்களை தீட்டி அதை செயல்ப்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகில் உள்ள அனைவரையும் இணைக்கும் பாலமாக பேஸ்புக் இருக்க விரும்புகிறது. இதனால் பல பில்லியன் டாலர்களை வருமானமாக பெற முடியும் என நம்புகிறது.

 

EFT

 

facebook-finding-its-next-billion-people

இதன் ஒரு முயற்சியாக பேஸ்புக் குறைந்த இணையதள வேகத்தில் வீடியோ காணும் வகையில் ஒரு விளம்பர பகுதியை வெளியிட்டுள்ளது. இதனால் குறைந்த வேகத்திலும் வீடியோ காணும் வசதியை பேஸ்புக் அளிக்கிறது. இது யூடியூப் வீடியோ இணையதளத்திற்கு போட்டியாக பேஸ்புக் ஏற்ப்படுத்தி உள்ள ஒரு பாராட்டக்கூடிய முடிவாகும்.

உலகின் இப்போது 300 கோடிக்கும் அதிகமானோர் இணையதளம் பயன்படுத்துக்கின்றனர். அதில் பேஸ்புக் 120 கோடி மக்களால் பயன்படுத்தப்போகிறது. இதன் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் 300 மில்லியன் பயனாளர்களும், பேஸ்புக் மெசென்ஜெர் 700 மில்லியன் மற்றும் வாட்ஸ்அப் 900 மில்லியன் பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது ஒரு தொடக்கம் தான் என பேஸ்புக் கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் யூரோப் போன்ற வளர்ந்த நாடுகளில் அதிவேக இணைய இணைப்பு பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து தான் 60% வருமானம் ஈட்டுகிறது. இந்தியா , ஆப்ரிக்கா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகள் இன்றும் 2g இணையதள சேவையை பெரும்பாலானோர் பெறுகின்றனர். எனவே 2G இணைய வேகத்தில் பேஸ்புக்கை விரைவாக லோட் செய்யும் வழிமுறைகளை கண்டறிய தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் செவ்வாய் கிழமை மட்டும் 2G இணைய இணைப்பு கொடுத்து இதை எவ்வாறு சரி செய்வது என்பதை ஆராய்ந்து வருகிறது.

மேலும் Internet.org தற்போது Free Basics மூலம் உள்ளூர் இணையதள நிறுவனங்கள் உதவியோடு ஒரு சில சேவைகளை இலவச இணைய இணைப்பு மூலம் வழங்குகிறது. மேலும் இணைய இணைப்பு இல்லாத இடங்களில் வான்வழி இணையதள பலூன்கள் மூலம் இணைய இணைப்பு வழங்கி பேஸ்புக் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது என கூறுகிறது. இப்படி பல வழிகளில் உலகை தன்வசப்படுத்த பேஸ்புக் முயன்று வருகிறது. அடுத்த 100 கோடி(The Next Billion) என்று பெயர் கொண்டு செயல்ப்பாட்டை தொடரும் பேஸ்புக்கிற்கு வாழ்த்துக்கள்.

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
 
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner