Tamil T-Shirt Banner

120 கோடிக்கும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பேஸ்புக் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை ஏற்ப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 5 முக்கிய மாற்றங்களை சோதனை அடிப்படையில் சில பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது

facebook-launched-video-profile-kanini-tamilan

 

பேஸ்புக்கின் வரப்போகும் மாற்றங்கள்

 

 7 நிமிட ப்ரோபைல் வீடியோ:

 

ட்விட்டர், ஸ்நாப்சாட் போன்றவை வீடியோ, அனிமேசன் படம் என ப்ரோபைல் போட்டோ வைக்க அனுமதிக்கிறது. பேஸ்புக்கில் அப்படிப்பட்ட வசதி இல்லை என நீங்கள் வருந்த வேண்டாம். இனி      உங்கள் ப்ரோபைல் போட்டோக்கு பதில் 7 நிமிட ப்ரோபைல் வீடியோ வைக்கலாம். அவை இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும். இதன் மூலம் இன்னும் சுவாரசியத்தை கூட்டலாம். மேலும் ப்ரோபைல் போட்டோவை கவர் போட்டோவின் நடுவே காணலாம். .              

 

 
தற்காலிக ப்ரோபைல் போட்டோ 

 

   ஒரு குறிப்பிட்ட படத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் ப்ரோபைல் போட்டோவாக வைக்கலாம். அடுத்து தானாக பழைய ப்ரோபைல் போட்டோ மாற்றப்படும். .         

 

About தகவல்கள்

 

எளிதாக தெரியும் வகையில் About தகவல்கள். மேலும் 100 எழுத்துகளில் உங்கள் தகுதி, தற்போதைய வேலை, இருப்பிடம் சார்ந்த தகவல்கள் அனைவரும் அறியும் படி ப்ரோபைல் போட்டோவுக்கு கீழாக நடுவே காட்டப்படும். 

 

மொபைலுக்கான  பேஸ்புக் டிசைன் 

 

மொபைலுக்கான  பேஸ்புக் டிசைன் ப்ரோபைல் வீடியோ, கவர் போட்டோ, உங்கள் தகவல்கள் தெளிவாக தெரியும் படி மாற்றியமைக்கப்படுகிறது      

 

   
உங்களை பற்றிய 5 பிரத்யேக போட்டோகள் 

 

உங்களை பற்றி தெளிவாக விவரிக்கும் வகையில் 5 பிரத்யேக போட்டோகள் போடலாம். இதன் மூலம் உங்களை பற்றி நீங்கள் தெளிவாக மற்றவர்களுக்கு தெரிவிக்காலம்.  

 

மாற்றம் மட்டுமே மாறாதது. பேஸ்புக் மட்டும் விதிவிளக்கா என்ன!

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner