Tamil T-Shirt Banner

பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் அறிவித்த இந்தியாவின் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி அளிக்கும் திட்டத்தின் முதல்ப்படியாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் இலவச வை-பை பயன்படுத்தும் திட்டம் இன்று செயல்ப்பாட்டுக்கு வருகிறது.

 
 
free-wi-fi-in-mumbai-railway-station-kanini-tamilan
 
இணைய வேகத்தை பொறுத்த வரை இந்தியாவின் சராசரி இணையவேகத்தை விட அதிகமாக இருக்கும் எனவும், தினமும் முதல் 30 நிமிடங்கள் வை-பை இலவசமாகவும் அதற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கும் முடிவும் இருப்பதாக தெரிகிறது. எனினும் மக்கள் 30 நிமிடத்திற்கு மேல் மக்களுக்கு மும்பை போன்ற நகரங்களில் நேரம் இருக்காது எனபதையும் கூகுள் கணக்கில் கொண்டு செயல்ப்படுகிறது.
 
இதற்கு கூகுள் நிறுவனம் இந்திய ரயில்வே நிறுவனமான RailTel மூலம் Fibercable பதிக்கும் பொறுப்பை ஏற்று 26000 கி.மீ வரை கேபிள் பதித்துள்ளது. இதனை 32,000 கி.மீ வரை நீட்டித்து மேலும் 400 ரயில்நிலையங்களில் இலவச வை-பை பெற உதவி புரிவதாக கூகுள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இதனால் தினமும் 70 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
 
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner