கூகுள் நிறுவனம் இந்திய கணினி பட்டதாரி மற்றும் வல்லுனர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் அப்ப்ளிகேசனை உருவாக்குவது தொடர்ப்பான பயிற்சியை ஆன்லைன் மூலம் வழங்குகிறது.
இந்த பயிற்சிக்கான கட்டணமாக மாதத்திற்கு 9,800 ரூபாய் பெறப்படுகிறது. 6 முதல் 9 மாதம் பயிற்சி காலம் ஆகும். இதில் 50% பணம் பயிற்சி முடிந்தவுடன் திருப்பி தரப்படும். இதற்காக கூகுள் நிறுவனம் ஆன்லைன் பயிற்சி கம்பெனி Udacity மற்றும் டாட்டா குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. மேலும் 1000 பேருக்கு உதவித்தொகை வழங்குகிறது அடுத்த வருடம் நடக்கயுள்ள கூகுள் வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் 36 லட்சம் கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
.
இது தொடர்பாக இந்தியாவுக்கான கூகுள் எம்.டி ராஜன் ஆனந்தன் கூறும்போது, உலகிலேயே இரண்டாவதாக அதிக கணினி பட்டதாரிகள் இருந்தும் கணினி மென்பொருள் தொடர்பான கண்டுபிடிப்புகள் மிகக்குறைவு. மேலும் முதல் டாப் 1000 மொபைல் ஆப்களில் இந்தியாவின் பங்கு வெறும் 2% தான். இந்த நிலையை மாற்ற கூகுளின் இந்த பயிற்சி உதவும்.
இந்திய பிரமரின் அமெரிக்க பயணத்தால் மென்பொருள் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதற்காக திறன்வாய்ந்த கணினி வல்லுனர்களை உருவாக்க இந்த பயிற்சி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.
கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
About Kanini Tamilan வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.
இந்திய அரசு வளர்ந்து வரும் இணைய தாக்குதல்களை சமாளிக்க நாடு முழுவதும் அணைத்து அரசு அலுவலங்களிலும் இந்தியாவின் புதிய கணினி இயங்குதளமான பாரத ஆபெரடிங் சிஸ்டம் சொலுசன்ஸ் (BOSS)...