வருங்கால டெக்னாலஜி தந்தையின் மரணச்செய்தியை கூறிய கூகுள்
கூகுள் சேர்மன் எரிக் ஸ்கிமிட் கூறியதாவது, கூகுள் வருங்கால தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதனால் மனிதனால் செய்யக்கூடிய விசியங்களை விட பல அற்ப்புத செயல்களை செய்யக்கூடியது தொழில்நுட்பம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இதோ
ரெட்டிட் யூசர் பார்னி13 என்பவர் ஆண்டராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் தொழில்நுட்பமான ஜிமெயில், கூகுள் நவ் , கூகுள் போட்டோஸ் போன்றவற்றில் வாய்ஸ் கம்மண்ட்ஸ் மூலம் தேடலில் ஈடுபடுகிறார். அப்பொழுது அந்த தேடல் தொடர்பான படங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
இறுதியில் ஒரு தேடலுக்கு முன்னால் தனது தந்தை இறந்த செய்திக்கான வருத்தத்தை கூகுள், வாய்ஸ் மூலம் தெரிவிக்கிறது. இதனை கண்டு அவர் நெகிழ்ந்து போனார். 2010இல் அவர் தந்தை இறப்புக்கு பின்னால் ஒருவர் அனுப்பிய அனுதாப ஈமெயில் கூகுளால் தேடப்பட்டு அந்த செய்தியை பார்னி13க்கு சொல்கிறது.
இது உண்மையிலேயே தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான ஒரு நிகழ்வு என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான வீடியோ உங்களுக்காக
Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.