Tamil T-Shirt Banner

ஆதார் கார்டு, இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்ட ஒரு ப்ரூப் கார்டு. ஆதார் கார்டு மூலம் நாம் பல சேவைகளை பெற அரசு வழிவகை செய்கிறது. ஆதார் கார்டுடன் உங்களது வங்கி கணக்கு, மொபைல் நம்பர் என அனைத்தையும் இணைத்து உங்களைப்பற்றிய ஒரு முழு தகவல் பெட்டகம் தான் ஆதார் கார்டு. இதன் மூலம் எளிதாக மக்களுக்கு சேவை வழங்க முடியும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் 120 கோடி மக்களின் தகவல்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது பற்றிய அடிப்படை புரிதல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதோ…

http://kaninitamilan.in/wp-content/uploads/2017/03/aadhar-data-leaked-by-government.jpg

நம்முடைய ஆதார் கார்டு தகவல்களை அரசு இணையதளங்கள் எவ்வாறு வெளியிடுகின்றன என்பதை பாருங்கள். இதற்கு பெரிய கணினி வல்லுனராக இருக்க வேண்டும் என்றில்லை கூகுள் பயன்படுத்த தெரிந்தாலே போதும்.

கூகுள் தளத்தில் சென்று “Aadhaar number name filetype:xls” என உள்ளீடு செய்தால் MHRD, National Disaster Management Agency மற்றும் பல அரசு தொடர்பான பல முக்கிய தகவல்கள் கொண்ட எக்ஸல் பைல்கள் நமக்கு கிடைக்கின்றன. அதில் பலரது ஆதார் கார்டு தகவல்கள், பேங்க் தகவல்கள் என அனைத்தும் கிடைக்கின்றன. இவற்றை கொண்டு ஒரு சில போன் கால்கள் மூலம் மோசடி ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது..

இதுதான் இந்த 120 கோடி மக்களின் தகவல்களை அரசு பராமரிக்கும் முறை. இவர்களை நம்பி தான் நமது தகவல்கள் ஒப்படைக்கிறோம். இதுதான் டிஜிட்டல் இந்தியா….

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner