Tamil T-Shirt Banner

இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல்’ என்னும் நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான புதிய இணையதளம்,
ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

 

national-scholarship-portal-kanini-tamilan

 

மத்திய, மாநில அரசுகள் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, தனித்திறமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு இடையே, மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்று வந்தனர்.

 

EFT

 

இந்நிலையில், முறைகேடுகளை தவிர்க்கவும், மாணவர்கள் எளிதில் கல்வி உதவித்தொகை பெறவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில், மத்திய அரசு, ‘நேரடி கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை’ துவங்கியது; www.scholarships.gov.in என்ற புதிய இணையதளத்தையும் அறிமுகம் செய்தது. தேசிய ‘இ-கவர்னன்ஸ்’ திட்டத்தின்மூலம் செயல்படும் இந்த இணையதளத்தில், உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை விவரங்களும், அவற்றின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

 

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 

 

features-national-scholarship-portal-kanini-tamilan-

 

ஒரே விண்ணப்பம், ஒரே முறை பதிவு

வங்கி மூலம் எளிய முறையில் உதவித்தொகை
 

MCENT

 
எஸ்.எம்.எஸ்., மற்றும் மின் அஞ்சல் மூலம் உடனடி தகவல்கள் பெறும் முறை

கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள், தங்களுடைய விவரங்களை, இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

இந்த இணையதள வசதியை, மாணவர்களுக்கு தெரியப்படுத்தி, இணையதள முகவரி, கல்வி உதவித்தொகை குறித்த முழு விவரங்களை, கல்லுாரி மற்றும் பல்கலை இணையதளத்தில் வெளியிடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உதவி அழைப்பு எண்: 040 23120300

வேலை நேரம்: 9 – 5.30

‘நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், குறிப்பிட்ட திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதால், மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 

இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner