Tamil T-Shirt Banner

என்னதான் ஐடி துறைப்பற்றிய பலத்தரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஐடி துறையின் மீதான ஈர்ப்பும் அதைச்சார்ந்த படிப்பின் ஈர்ப்பும் மீதான இன்னும் குறையவில்லை. டாட் நெட் , நெட்ஒர்க் செர்டிபிகேட் தொடர்பான படிப்புகள் பழமையாகிவிட்ட நிலையில் புதிய படிப்புகளுக்கான தேடல் மற்றும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 

http://kaninitamilan.in/wp-content/uploads/2016/06/top-IT-courses-of-2016-kanini-tamilan.jpg

 

இதோ வருங்காலத்தில் உங்களுக்காக உதவும் 8 ஐ.டி படிப்புகள்:

 

ஸ்பார்க் (Spark)

 

ஸ்பார்க் என்பது ஓபன் சோர்ஸ் ப்ராசஸிங் என்ஜின். அபாச்சே (Apache)க்கு அடுத்து பெரிய கம்பெனிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன். மிகப்பெரிய தகவல்களை கையாள உதவும் டேட்டாபேஸ் சாப்ட்வேர்.

 

அஸுர் (Azure)

 

அஸுர் மைக்ரோசாப்ட கிளவுட் கம்ப்யூட்டிங் ப்ளட்போர்ம். இதன் மூலம் மொபைல் ஆப் மற்றும் அனலிடிக்ஸ் துறையில் ஜொலிக்கலாம். இதனுடன் அமேசான் வெப் சர்வீஸ் (AWS) படித்தால் உங்களுக்கு வேலை உறுதி 

 

சேல்ஸ் போர்ஸ் (Salesforce)

 

சேல்ஸ் போர்ஸ் என்னும் அப்பிளிக்கேஷன் புதிதல்ல. இருந்தும் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேல்ஸ் பிரிவிற்கு தேவையானவற்றை அளிக்கிறது. இதன் மூலம் கஸ்டமர் ரீலேசன் மேம்படுத்தலாம் 

 

பிக் டேட்டா 

 

சமீப காலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படிப்பு. பெரிய கம்பெனிகளில் அடங்கிருக்கும் எண்ணிலடங்காத தகவல்களை கையாளும் டேட்டாபேஸ் தொடர்பான படிப்பு. பிக் டேட்டா படித்தவர்களின் தேவை மிக அதிகம்.

 

ஜிரா (JIRA)

 

சாப்ட்வேர் பிழைத்திருத்தும் டூல். ப்ரொஜெக்ட் மேனேஜ்மென்ட்டிற்கு பயன்படும். ஏற்கனவே 35 ஆயிரம் பெரிய கம்பெனிகளால் பயன்படுத்தப்படும் டூல். சாப்ட்வேர் டெவெலப்மென்ட் பிரிவில் உள்ளவர்களுக்கு மிகத்தேவையான டூல் படிப்பு 

 

கிளவுட் கம்ப்யூட்டிங் 

 

அனைவரின் அறிந்ததே. இணைய வழியாக நடக்கும் செயல்களை கையாளும் திறன் வாய்ந்த படிப்பே கிளவுட் கம்ப்யூட்டிங்.

 

ஹீவே (Hive)

 

ஹிவே என்பது டேட்டா பேஸ் கியூரி டூல். இது பெரிய கம்பெனிகளின் சேமிக்கப்படும் தகவல்களை பிரிக்க உதவும் டூல். இது சார்ந்த படிப்புகளின் தேவை அதிகம் 

 

கசென்றா:

 

கசென்றா பேஸ்புக்கினால் வடிவமைக்கப்பட்டு, ஆப்பிள் காம்காஸ்ட், இன்ஸ்டாகிராம் போன்ற பல கம்பெனிகளால் பயன்படுத்தப்படும் டேட்டாபேஸ் சாப்ட்வேர்.  இதைப்படிப்பதன் மூலம் முக்கிய கம்பெனிகளில் வேலை உறுதி.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்        

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner