Tamil T-Shirt Banner

வை-பை, இன்றைய இளையதலைமுறைக்கு காற்றில் கலந்த கண்ணுக்கு தெரியாத நண்பன். வை-பை மூலம் அதிவேக இணையஇணைப்பை நமது ஸ்மார்ட்போன்களில் பெற முடியும். இருந்தும் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் வை-பை சிக்னல் கொஞ்சம் குறைவாக இருக்கும். இதற்கு சில காரணங்கள் இதோ…

 

wi-fi-slow-down-reasons-kaninitamilan

 

உயர்ந்த இடம்

 

வை-பை இருக்கும் இடமானது சற்று உயரத்தில் இருந்தால் நல்லது. உயரம் குறைந்த இடத்தில வைத்தால் பல இடையூறுகள் குறுக்கிடுவதால் சிக்னல் முழுமையாக கிடைக்காது.

 

           .             
கான்கிரீட் & மெட்டல் 
வை-பை அருகில் கான்கிரீட் சுவர்  & மெட்டல் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கான்கிரீட் & மெட்டல் போன்றவற்றில் வை-பை சிக்னல் ஊடுருவி செல்வது சிரமம் 

 

EFT
குறைந்த இடைவெளி 

 

உங்கள் சாதனத்திற்கும் வை-பை இருக்கும் இடத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகமாக இல்லாமல் சற்று அருகில் இருக்கலாம். மேலும் வை-பை 390 டிகிரி செயல்படகூடியதால் அதை ஓரமாக அல்லாமல் வீட்டின், அலுவலகத்தின் நடுவில் உள்ளபடி வைத்தால் அனைவருக்கும் வை-பை கிடைக்கும்.       

 

சிக்னல் இழப்பு

 

நமக்கு தெரியாமலேயே நம்மை சுற்றி முழுவதும் செயற்கைக்கோள்,ச செல்போன் சிக்னல்கள் அனைத்தும் செல்வதால் சிறிய வை-பை சிக்னல்  இழப்பு நிச்சயம் எற்ப்படதான் செய்யும் 

 

மைக்ரோவேவ் ஓவன் மற்றும் ப்ளூடூத்  
             

 

மைக்ரோவேவ் ஓவன் 2.45 GHz மற்றும் ப்ளூடூத்(2.4 GHz)  சிக்னலை பயன்படுத்துவதால் வை-பை சிக்னலுக்கு (2.4 GHz) இடையுறு ஏற்ப்படுத்தும்.   

 

கிறிஸ்மஸ் விளக்குகள் 

 

கிறிஸ்மஸ் விளக்குகள் எலெக்ட்ரோ-மக்னடிக் வேவ் வெளியிடுவதால்  வை-பை சிக்னல் ஈர்க்கப்பட்டு வேகம் குறைகிறது 

 

பெரிய பைல் டவுன்லோட் 

 

பெரிய பைல் டவுன்லோட் , உங்களது வை-பை சிக்னலை அதிக அளவில் பயன்படுத்துகிறது. இதனால் மற்ற சாதனங்களின் வை-பை வேகம் குறைகிறது.

 

மனித இடையுறு 

 

பொதுவாக ரேடியோ வேவ் தண்ணீரில் ஊடுருவாது. மனித உடல்கள் 60% தண்ணீரால் ஆனது. இதனால் கூட்டமாக மனிதர்கள் இருக்கும் இடத்தில வை-பை சிக்னல் ஊடுருவது கடினம். அதற்காக அனைவரையும் வெளியேற்றவா முடியும்? என நீங்கள் கேப்பது புரிகிறது.இதனால் பெரிய இழப்பு இல்லையென்றாலும் உங்களுக்கு ஒரு தகவல்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழனின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner