Tamil T-Shirt Banner

கணினி உலகில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் இயங்குதளம் விண்டோஸ். தற்போது விண்டோஸ் 8.1 அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.  இதன் புதிய பதிப்பான விண்டோஸ் 10(Windows 10) பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளிவர இருக்கிறது.

 

windows-10

 

விண்டோஸ் 10 பதிப்பு கண் மற்றும் கைரேகை பதிவு கொடுத்தால் இயங்கும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளது. இதற்கு விண்டோஸ் ஹலோ(Windows Hello)என்னும் புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் விண்டோஸ் 10 பயன்படுத்தும் கணினி, மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் நீங்கள் கண் மற்றும் கைரேகை பதிவு மூலம் பாஸ்வார்டு அல்லாத பாதுகாப்பு முறையை பயன்படுத்தலாம். மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தும் லோக்கல் ஸ்டோர் எனப்படும் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். மேலும் இண்டெல் ரியல்சென்ஸ் வெப் கேமரா மூலம் உங்கள் தகவல்கள் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்ததக்கது

 

மேலும் மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட்(Windows passport) எனப்படும் புதிய சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் ஐ.டி, சாப்ட்வேர் மற்றும் வெப் பயன்படுத்துவோர் விண்டோஸ் ஹலோ மூலம்  கண் மற்றும் கைரேகை மூலம் பாதுகாப்பு சேவையை தங்கள் அப்ப்ளிகேசனுக்கு பயன்படுத்தமுடியும்.

 

விண்டோஸ் ஹலோ சேவை தற்போது உள்ள கணினிகளுக்கு பயன்படுத்த முடியுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. விரைவில் மைக்ரோசாப்ட் இதற்கு விடையளித்து கேள்வி குறியை ஆச்சிரிய குறியாக மாற்றும் என நம்புவோம்.

 

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

 

கணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.

 

கணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்   

 

 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  

 

இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்

 

Kanini Tamilan About Kanini Tamilan
வணக்கம்! . "கணினி தமிழன்" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.

Tamil T-Shirt Banner